கொவிட் பரவல் மற்றும் கந்தபுரம் கரும்பு தோட்ட காணி விடயம் உள்ளிட்ட விடயங்களை ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் இதுவரை சமூக தொற்றாக மாற்றமடையவில்லை என்று தெரிவித்துள்ள மாவட்ட சுகாதார வைத்திய பணிபபாளர் வைத்திய கலாநிதி சரவணபவன், சுமார் ஆயிரம் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(07) இடம்பெற்ற கொரோனா தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.   

எனினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் கொரோனா தொற்றாளர்களுக்கான வைத்திய வசதிகள் ஏறாபடுத்தப்பட்ட நிலையில், அனைத்து இடங்களிலும் சமகாலத்தில் வைத்திய சேவையை மேற்கொள்வதற்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இதுதொடர்பாக சுகாதார திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.