தளம்
பிரதான செய்திகள்

இலங்கையை ஆட்சி செய்வது யார்? கவலையுடன் பேராயர் மெல்கம் ரஞ்சித்

நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த குழு, நாட்டை அழிவின் பாதையில் இழுத்துச் செல்வதாக வேதனையுடன் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் சிதைந்துவிட்டதாகவும், நாட்டில் மிகவும் ஆபத்தான சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொரள்ளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.’நல்லாட்சி’ மற்றும் ‘செழிப்பு பார்வை’ என்ற கருப்பொருளுடன் எந்த அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அது துரோகங்களை மட்டுமே செய்துள்ளது என்றும் இந்த பயணம் இப்போது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவலைப்படுவதாகக் கூறியுள்ள அவர், நாடு எங்கு செல்கிறது என்பது குறித்து ஒரு பிரச்சினை எழுந்துள்ளது, யார் முடிவுகளை எடுக்கின்றார்கள், யார் நாட்டை ஆள்கின்றார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள வளங்களை விற்பது எளிதானது என்று கூறிய அவர், ஆனால் வளர்ச்சி என்பது நாட்டின் அனைத்து வளங்களையும் விற்றுவிடுவது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நேரத்தில் எமது பிராந்தியத்தை மற்ற நாடுகளுக்கு தியாகம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்.ஒரு அரசாங்கம் மக்களை மனதில் கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டும், பணக்கார, சக்திவாய்ந்த அல்லது வெளிநாட்டு சக்திகளின் பக்கத்திலிருந்து அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

டயகம சம்பவம் – குடும்பத்தாருக்கு 3 மில்லியன் இழப்பீடு வங்கியில் வைப்பு!

Fourudeen Ibransa
1 year ago

ஹட்டனில் முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு…!

Fourudeen Ibransa
1 year ago

மீண்டும் பாராளுமன்றத்துக்குள் கோட்டா.!

Fourudeen Ibransa
1 year ago