சிறுவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை உடன் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பணிக்கமர்த்தப்பட்ட சிறுவர்களை மீள வீடுகளுக்கு அனுப்பாதவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில்  வைத்து இதனை தெரிவித்த அவர், எதிர்காலத்தில் சகல கிராமஅதிகாரிகள் பிரிவுகள் தோரும் ஒரு சமூக பொலிஸ் அதிகாரி நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் சிறுவர் பாதுகாப்பு பொலீஸ் பிரிவுடன் இணைந்து இதுதொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றும் கூறினார்.

தற்போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளதால் வீட்டு உரிமையாளர்கள் தமது குறைந்த வயது சேவகர்களை திருப்பி அனுப்புவதில் சிரமம் இருக்காது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.