தளம்
உலகம்

அமெரிக்காவின் இராணுவ தலைமையிடத்தில் தாக்குதல்.. அதிகாரி பலி.. ஊரடங்கு அறிவிப்பு..!!

அமெரிக்க நாட்டின் ராணுவத்தின் தலைமை இடமான பென்டகனில் ஒரு அதிகாரி கொலை செய்யப்பட்டதால் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. தலைநகர் வாஷிங்டனில் இருக்கும் அர்லிங்டன் என்ற பகுதியில், இருக்கும் பென்டகன்,  உலகிலேயே அதிநவீன ராணுவத்தின் தலைமை இடமாக விளங்குகிறது. எனவே அங்கு வழக்கமாகவே பலத்த பாதுகாப்புகள் இருக்கும். இந்நிலையில் நேற்று காலையில் பென்டகனுக்கு அருகில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில், பென்டகனுக்கு வெளியில் போக்குவரத்து நிலையத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு அதிகாரியை  கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் அவர் மரணமடைந்தார். இச்சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

எனவே பென்டகனை சுற்றியிருக்கும் பகுதியில் உடனடியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், அங்கு பணியாற்றும், பணியாளர்கள் பத்திரமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சோலேடர் நகரை கைப்பற்றியது ரஷ்யா:

Fourudeen Ibransa
1 year ago

பதவி விலகுகிறார் மலேசிய பிரதமர்.!

Fourudeen Ibransa
3 years ago

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை மோதல்கள்.!

Fourudeen Ibransa
3 years ago