ஏ எல் ஜுனைதீன்நாட்டில் கோவிட் தொற்றினால் ஐந்து மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருந்து மற்றும் சுகாதார மேலாண்மை ஆலோசகர் வைத்தியர் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,“உண்மைய கூறுவதென்றால் நாடு இப்போது பெரும் ஆபத்தில் இருக்கின்றது. தற்போது இலங்கையில் இறப்பு விகிதம் இந்தியாவில் உள்ளதைப் போலவே உள்ளது.

நாளாந்தம் கோவிட் தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டும் என்று அவர் கூறினார்.இவ்வாறான நிலையில், அரச ஊழியர்களை பணிக்கு மீளவும் அழைத்தமை தவறான முடிவாகும். இந்த சூழ்நிலையில் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

223 SharesLikeCommentShare