தளம்
உலகம்

குழந்தைகளுக்கான குடியுரிமை….,!

இந்தியாஇ சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் அமெரிக்காவிற்கு சென்று சம்பாதிப்பது அவர்களின் பலநாள் கனவாகவுள்ளது. இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குபவர்கள்இ மற்ற துறைகளை சார்ந்த வல்லுநர்கள் போன்றோரை அமெரிக்க நிறுவனங்களில் பணியமர்த்த ர்1டீ விசாவை அந்நாட்டு அரசு வழங்குகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 85 ஆயிரம் பேர் அவர்கள் குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு வருகின்றனர். இவ்வாறு வருபவர்களுக்கு சட்ட சிக்கல் ஒன்று ஏற்படும். அதாவது தாய் அல்லது தந்தையுடன் வசிக்கின்ற குழந்தைகள் 21 வயது பூர்த்தி அடையும் பொழுது அவர்களை சார்ந்து இருக்க முடியாது என்று அமெரிக்க சட்டம் கூறுகிறது. இதனால் பிற நாட்டிலிலிருந்து வரும் பெற்றோர்களின் குழந்தைகள் அவர்களின் தாய் நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக சுமார் 2 லட்சம் குழந்தைகளின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து அவர்களின் பெற்றோர்கள் அமெரிக்காவில் வசிப்பதற்கான கிரீன் கார்டு விண்ணப்பத்தை அளித்து காத்துள்ளனர். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ‘இம்ப்ரூவ் தீ ட்ரீம்’ என்ற அமைப்பு அங்கு செயல்பட்டு உதவி புரிகிறது. அதில் சட்டபூர்வமாக குடியேறிய பிற நாட்டினரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்காக இந்த அமைப்பு ஜோ பைடன் நிர்வாகத்தில் செயல்படுகிறது. இது ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும். இந்த நிலையில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி நிருபர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ‘பெற்றோருடன் வசிக்கும் பிற நாட்டு குழந்தைகள் நாடு கடத்தப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது’ குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அவர் கூறியதாவது ‘பெற்றோர்களுடன் வசிக்கும் வெளிநாட்டு குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மேலும் அமெரிக்காவின் குடியேற்ற முறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அதில் இந்த விசா தொடர்பான செயல்முறைகளும் அடங்கும். இதனை அடுத்து குடியேற்ற மசோதாவானது நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குடும்ப குடியேற்ற அமைப்பில் சீர்திருத்தங்கள்இ பயன்படுத்தாத விசாக்களை திரும்ப பெறுதல்இ போன்றவை அடங்கும். மேலும் அதில் பிற நாடுகளிள் விசா வரம்புகளை அதிகமாக்குவது பற்றியும் கூறுகிறது. குறிப்பாக இந்த ர்1டீ விசா வைத்திருப்பவர்களுக்கு வேலை அங்கீகாரம் தருவதோடு மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளும் நாடு கடத்தப்படுவதை தடை செய்கிறது.

Related posts

அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு தகுதி பெற்ற இலங்கை தமிழ் சிறுமி…!

Fourudeen Ibransa
2 years ago

ஆஸி. அணி அபார வெற்றி – புள்ளி பட்டியலிலும் முன்னேற்றம்…!

Fourudeen Ibransa
2 years ago

அமெரிக்க தூதரக அதிகாரியின் கைப்பை அபகரிப்பு…!

Fourudeen Ibransa
2 years ago