டி20 உலகக் கோப்பை போட்டியில்இ நியூசிலாந்து டி20 அணியில் இடம்பெறாத காரணத்தால் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகஇ அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ‘காலின் மன்றோ’ தெரிவித்து உள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக கருதப்பட்டு வருபவர் ‘காலின் மன்றோ’. இவர் நியூசிலாந்து அணிக்காக 1 டெஸ்ட் ஆட்டம்இ 57 ஒருநாள் ஆட்டங்கங்கள்இ 65 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

அந்த அணியில் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன காலின் மன்றோஇ கடைசியாக 2020-ஆம் ஆண்டுஇ பிப்ரவரி மாதம் நியூசிலாந்து அணிக்காக டி20 ஆட்டத்தில் விளையாடினார். அதன் பிறகு எந்த ஆட்டத்திலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. குறிப்பாக வங்கதேசம்இ பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களில் இவரின் பெயர் இடம்பெறவில்லை.

இந்தநிலையில்இ டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான இந்த அணியில் அதிரடி வீரர் காலின் மன்றோஇ காலின் டி கிராண்ட்ஹோம்இ ஃபின் ஆலன் ஆகியோருக்கு இடமளிக்கப்படவில்லை.

மேலும்இ மூத்த வீரர் ராஸ் டெய்லரும் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்இ டி20 உலகக் கோப்பை போட்டியில்இ நியூசிலாந்து டி20 அணியில் இடம்பெறாத காரணத்தால் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகஇ அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ‘காலின் மன்றோ’ தெரிவித்து உள்ளார். மேலும்இ எனக்கு வாய்ப்பு கிடைக்காததில் வேதனையில் உள்ளேன்.

நியூசிலாந்து அணிக்காக என்னுடைய கடைசி ஆட்டத்தை விளையாடி விட்டதாக நினைக்கிறேன்’ என்று ‘காலின் மன்றோ’ தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.