தளம்
உலகம்

கடலில் மூழ்கி தத்தளித்த நால்வர் குடும்பம்:

ஒன்ராறியோவின் லண்டனை சேர்ந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தைஇ கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய ஒரு குடும்பத்தை காப்பாற்றியுள்ளது பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. லண்டனை சேர்ந்த டீசழளெழn னுநயபடந என்பவர் சம்பவத்தன்று தமது குடும்பத்தினருடன் ஓய்வு நாளை கழிக்க புசயனெ டீநனெ கடற்கரைக்கு சென்றுள்ளார். இந்த நிலையிலேயே கடலில் மூழ்கிய நால்வர் குடும்பத்தை துளி நேரமும் யோசிக்காமல் கடலில் குதித்து காப்பாற்றியுள்ளார்.

சம்பவத்தின் போது கடலில் கடுமையான அலைகள் இருந்துள்ளதாகவும்இ காற்றும் பலமாக வீசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில்இ திடீரென்று தமது பார்வை கடலுக்குள் மூழ்கி தத்தளிக்கும் ஒரு கை தென்பட்டதாகவும்இ அதன் பின்னர் ஒரு நொடி கூட தாமதிக்காமல் கடலில் குதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு அந்த நால்வர் குடும்பத்தை மீட்டு கரைக்கு கொண்டு சேர்த்துள்ளார். பின்னர் அவரால் முடிந்த அளவுக்கு முதலுதவியும் அளித்துள்ளார்.

இதனிடையே அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவப்பகுதிக்கு வரவேஇ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இரு குடும்பமும் அதன் பின்னர் தொடர்பு கொண்டிருந்தும்இ விபத்தில் சிக்கிய குடும்பம் தொடர்பில் ரகசியம் காக்கப்படுவதாக கூறப்படுகிறது. மட்டுமின்றிஇ இக்கட்டான நிலையில் தங்களின் உயிரை காப்பாற்றியதற்கு நன்றியும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கோட்டபாயவினால் மாலைத்தீவிலும் பதற்றம் -.!

Fourudeen Ibransa
2 years ago

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல் : 30 பேர் பரிதாப பலி

Fourudeen Ibransa
3 years ago

3 ஆவது முறையாகவும் டொரண்டோ மேயராகிறார் ஜோன் டொரி..!

Fourudeen Ibransa
2 years ago