கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கட்டுப்பாடு விதிப்பது தினசரி ஊதியம் பெறுபவர்களையும், பெரும்பாலான அரசு ஊழியர்களையும் மோசமாக பாதிக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை, இன்று (13) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான கோவிட் தடுப்பு செயலணியின் சந்திப்பைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இன்று (13) காலை 10.30 மணிக்கு திட்டமிடப்பட்ட கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அரசாங்க தகவலை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சந்திப்பு பிற்பகலில் நடக்கலாம் என்று கூறப்பட்ட போதும், சில பங்கேற்பாளர்கள் கோவிட் காரணமாக கலந்து கொள்ள முடியாததால் நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.