தளம்
பிரதான செய்திகள்

கோவிட் வைரஸின் மற்றுமோர் திரிபு!

கோவிட் வைரஸின் திரிபான எபிசிலோன் என பெயரிடப்பட்டுள்ள திரிபு நாட்டிற்குள் பரவினால், ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் இறப்பார் என அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் ஒரு மணி நேரத்தில் 30 பேர் இறக்கக் கூடும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த புதிய வைரஸை எதிர்கொள்ள மக்களின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி மூலம் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியும் போதாது என கண்டறியப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஸான் பெல்லன தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த புதிய திரிபு இலங்கைக்குள் கண்டறியப்படவில்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் நாடுக்குள் பரலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தேவையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

டெல்டா திரிபால் அழிந்த உயிர்களை விட எபிசிலோன் திரிபு மூலம் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும் எனவும் மருத்துவர் பெல்லன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொல்லப் பார்க்கிறார் ரணில்- சிங்கள இளைஞர்களே அவதானமாக இருங்கள்..!

Fourudeen Ibransa
1 year ago

கத்தார் நாளுக்கு நாள் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது…!

Fourudeen Ibransa
1 year ago

பீரிஸ் தலைமையிலான குழு 25 இல் ஜெனிவா விரைகிறது!

Fourudeen Ibransa
2 years ago