கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வயலிகவல் பகுதியில் வசிக்கும் 36 வயதான சுதா என்ற பெண் ஒரு தொழிலதிபர் ஆவார் .அவர் சமீபத்தில் இணைய தளத்தில் ஒரு விளம்பரம் பார்த்தார் .அந்த விளம்பரத்தில் கிட்னி விற்ப்பவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தது .அதன் படி அந்த பெண் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்ட போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசினார் .

அப்போது டாக்டர் சீமா ராய் என்பவர் அந்த பெண்ணிடம் பேசினார் .அப்போது அவர் அந்த பெண்ணின் கிட்னிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாகவும் இஅதற்கான ரிஜிஸ்ட்ரேஷன் பீஸ் மற்றும் இதர கட்டணமாக எட்டு லட்ச ரூபாய் பணததை உடனடியாக கட்ட வேண்டுமென்று கூறி அவரின் அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்ப சொன்னார் .அதை நம்பிய அந்த பெண் எட்டு லட்ச ருபாய் பணததை அவர் சொன்ன அக்கவுண்டுக்கு பல தவணைகளில் அனுப்பினார் .அதன் பிறகு அந்த டாக்டரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை .இதனால் அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார் .

அதனால் அவர் உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் அந்த டாக்டரை தேடி வருகின்றனர் .இதே போல நிறைய மோசடிகள் நடப்பதாகவும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று போலீசார் பொது மக்களை கேட்டு கொண்டனர்