விஜய் டிவி இதுவரை 4 பிக் பாஸ் சீசன்களை நடத்தியிருந்தாலும் பிக் பாஸ் சீசன் 3 ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு தனி இடத்தைப் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் நிறைய வரவேற்பு கிடைத்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷன், பிக் பாஸ் முகேன், லாஸ்லியா, கவின் என அனைவருமே தற்போது சினிமாவில் தங்களுடைய ஆதிக்கங்களை தொடர ஆரம்பித்துள்ளனர். அந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா.

பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் ஜோடிகளாக வலம் வந்த இருவரும் வெளியில் வந்த பிறகு அவர் அவரவர்கள் வழியை பார்த்து சென்றுவிட்டனர். அதைத்தொடர்ந்து லாஸ்லியா பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் கூகுள் குட்டப்பா.

கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடிக்கும் இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் லாஸ்லியாவுக்கு ஜோடியாக தர்ஷன் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா டீசரில் இருவரும் பெட்ரூம் காட்சியில் நடித்திருந்தனர். இது போதாதா நெட்டிசன்களுக்கு. லாஸ்லியாவின் பழைய காதலரான கவினுடன் சேர்த்து வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ணி இணையத்தில் உலாவ விட்டுள்ளனர். தற்போது இந்த மீம்ஸ்கள் தான் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.