வடக்கு, கிழக்கில் கடந்த காலங்களில் அந்த மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பாக எவ்வாறு கசப்பான அனுபவங்கள் நடைபெற்றதோ அதேபோன்று இன்று மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களினது காணிகள் அபகரிக்கப்படுகின்றதா? பெருந்தோட்டத் தொழிலாளர்களது எதிர்காலம், மலையக மக்களினுடைய காணி நிலம் அபகரிக்கப்பட்டு விடுமோ என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இன்றைக்கு பெருந்தோட்டங்களில் கால்நடை அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கான காணிகளை குறிவைத்து எமது இருப்புக்கு ஓர் ஆபத்தை ஏற்படுத்தி பல குடியிருப்புகளை அங்கு ஏற்படுத்தி மலையகத்திலுள்ள அமைதியான சூழலை களங்கப்படுத்தி ஒரு பிரச்சினைக்கு ஆயத்தமாகின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கண்டி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலையக மக்களினுடைய காணி நிலம் அபகரிக்கப்பட்டு விடுமோ என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.