ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவிற்கான தூதுவராக மஹிந்த சமரசிங்க நியமிக்கப்படவுள்ள நிலையிலேயே, அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது