சென்னையைச் சேர்ந்த விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனத்தின் இந்தியாவின் முதல் மற்றும் ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் கார் விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

ஹைப்ரிட் பறக்கும் கார் பயன்பாட்டுக்கு வந்தால், அலுவலகத்துக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதற்கு பதிலாக இந்தியர்கள் விரைவில் பறக்கும் கார்கள் மூலம் நகரங்களில் உள்ள தங்களது இடங்களுக்கு சிரமமின்றி பயணிக்கலாம்.

இந்த நிலையில், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா திங்களன்று தனது டுவிட்டர் பக்கத்தில், “சென்னையைச் சேர்ந்த விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனத்தின் இளம் குழுவினரால் ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் கார் உருவாக்கப்பட்டுள்ளது. பறக்கும் கார்கள் விரைவில் மக்கள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதற்கும், மருத்துவ அவசர சேவைகளை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும்” என பதிவிட்டுள்ளார்