அண்மையில் ஒளிப்பரப்பான இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளியிட்ட தகவல் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் நேற்று இரண்டு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சிவில் செயற்பாட்டாளரான நிசார் மௌலான ஆகியோர் முன்வைத்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இறைவன் அல்லாஹா எனக் கூறி அவமதித்து, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு தடையேற்பத்தியுள்ளமை, எதிர்காலத்தில் நடக்க உள்ள அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக கூறினாலும் அவற்றை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்காததன் மூலம் தகவல்களை மறைத்தமை ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை போன்ற பயங்கரவாத தாக்குதல் ஒன்று எதிர்காலத்தில் நடத்தப்பட உள்ளதாகவும் அது பற்றிய அனைத்து தகவல்களும் தன்னிடம் இருப்பதாகவும் அதனை சாட்சியங்களுடன் ஒப்புவிக்க முடியும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.