தளம்
உலகம்

தலிபான்கள் விடயத்தில் ரஷ்யா சந்தேகம்!

ஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் தலிபான்கள் விடயத்தில் இணைந்து செயல்படுகின்றன. ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களாகிய தலிபான்கள் நேர்மையுடன் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா, தீவிரவாதம் பரவுவதை தடுக்கிறார்களா போன்றவற்றை  நிச்சியப்படுத்திக்கொள்ளும் வகையில் இணைந்து செயல்படுகின்றோம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சர்ஜெவ் லெவ்ரோவ்  (Sergey Viktorovich Lavrov) தெரிவித்தார். இந்த நான்கு நாடுகளும் தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ரஷ்யா, சீனா, மற்றும் பாகிஸ்தான் நாட்டு பிரதிநிதிகள் அண்மையில் கட்டாருக்கும் பின்னர் ஆப்கன் தலைநகர் காபூலுக்கும் தலிபான்கள் மற்றும் மதசார்பற்ற அதிகாரிகள் ஆகிய இருபிரிவினருடனும் கலந்துரையாடச் சென்றிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆகியோர் கவிழ்க்கப்பட்ட அரசாங்கத்தினருக்கு தலைமை வகித்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தலிபான்களால் அறிவிக்கப்பட்ட இடைக்கால அரசு, ஆப்கானிஸ்தான் சமூகத்தின் சமய, அரசியல் உள்ளிட்ட முழு அபிலாசைகளையும் பிரதிபலிக்கவில்லை. ஆதலால் நாங்கள் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கிறோம் என்று லெவ்ரோவ் மேலும் தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை இருந்ததைவிட நவீன வடிவில் இஸ்லாமிய அரசை சிறப்பாக நடத்துவதாகவும்,  பெண்களின் உரிமைகளை மதித்தல், 20 வருட யுத்தத்திற்குப்பின்னர் ஒரு ஸ்திரதன்மையுள்ள ஆட்சி, பயங்ரவாதம் தீவிரவாதம் என்பவற்றை எதிர்த்து போராடல், போராளிகள் தாக்குதல்களில் ஈடுபடுவதை நிறுத்துதல் உட்பட்ட எல்லா அமசங்களுடனான சிறந்த ஓர் அரசாங்கத்தை நிறுவுவதாக தலிபான்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் அவர்களின் அண்மைய செயல்பாடுகள் அவர்கள் முன்பைவிட அதிக அடக்குமுறை கொள்கைகளுடன் திரும்பியிருப்பதாகத் தெரிகிறது. பிரதானமாக பெண்கள், பெண்பிள்ளைகள் விடயத்தில் அவர்கள் வாக்குத் தவறிவிட்டனர். .

 எது மிக முக்கியம்? அவர்கள் பகிரங்கமாக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான். எங்களைப்பொறுத்தவரை அதற்குத்தான் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லையென்று ஒரு பரந்த செய்தியாளர் மாநாட்டில்  பேசிய லெவ்ரோவ்  பின்னர் ஐ.நா. பொதுச்சபையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவின் விடுவிப்பு உட்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டி பைடன் நிர்வாகத்தை விமர்சித்தார்.

அமெரிக்காவும், நேட்டோவும் பின்விளைவுகளைப்பற்றி ஆலோசிக்காமல் வெளியேறின. பல ஆயுதங்கள் ஆப்கானிஸ்தானிலேயே விட்டுவைக்கப்பட்டுள்ளன. அவை மிகவும் ஆபத்தானவை. லெவ்ரோவ் மேலும் தெரிவிக்கையில், பெரிய சக்திகளுக்கிடையிலான உறவுகள் மதிக்கப்படவேண்டும். இந்த உறவுகள் அணு ஆயுதப்போராக உருவாகாது என்பதை ரஷ்யா  உறுதி செய்கிறது. பிரதான சக்திகளுக்கு ஒரு முக்கிய பொறுப்பு உள்ளது.

உலகம் எதிர்நோக்கும் ஆபத்தான விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், சமரசத்தை ஏற்படுத்தவும் ரஷ்யா ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான உச்சிமாநாட்டை நடத்தும் அதன் கோரிக்கைக்கு புத்துயிர் அளிக்க முயல்கிறது. குறிப்பிட்ட கேள்விகளுக்கான விவாதங்கள் தயார் நிலையில் உள்ளன. நாங்கள் ஒர் ஒன்லைன் கூட்டத்தை நடத்தலாம்.

அசல் ஒப்பந்தத்தை விரைவில் மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இயன்றவரை  விரைவில் மீண்டும் ஆரம்பிப்பதில் ரஷ்யா ஆர்வமாக உள்ளது. எங்களுக்கு மிக தீவிர நம்பிக்கை உள்ளது. இது நன்கு உறுதியான நம்பிக்கை என்று கருதுகிறேன். நாங்கள் இதற்கான பெறுபேற்றை அடைவோம். ஏனெனில் இது எல்லோருக்கும் தேவையானது என்றும் லெவ்ரோவ் கூறினார்.

Related posts

உக்ரைன் ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் – சவுதி அரேபிய இளவரசர்

Fourudeen Ibransa
2 years ago

’சட்டத்தின் முன் அனைவரும் சமம்’

Fourudeen Ibransa
3 years ago

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார்.

Fourudeen Ibransa
2 years ago