ASHKAR ALI

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் கடந்த (11) கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் பங்குபற்றுதலுடன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் தேசிய காங்கிரஸ் தலைவரும், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ.ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு எதிர்காலத்தில் கிராம மட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அரசின் சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புதல் எனும் தொனிப்பொருளில் கிராமங்களை எழுச்சிமிக்கதாய் மாற்றுதல் வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள கிராம சேவகர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இதன் போது கலந்தாய்வு செய்யப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ.எம்.ஏ. ராசீக், கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க். ஏ. எம்.ரஹ்மத்துல்லாஹ், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ. காதர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.வஃஸீர்,உயர் அதிகாரிகள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,மாநகர சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவை அதிகாரிகள்,,கிராம மட்ட அமைப்பினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.