தளம்
இந்தியா

உண்மையில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து.!

உண்மையில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் தெரியுமா? கட்ந்த ஏழாண்டுகால இந்திய வரலாற்றை எடுத்துப் பாருங்கள். புரியும்

வதூறு ஸ்பெஷலிஸ்ட்டுகளான கிஷோர் மற்றும் சாட்டை துரை கைதுக்கு பின் தொடர்ச்சியாக கருத்துரிமையின் குரல் நசுக்கப்படுவதாக எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. உண்மையில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவது என்றால் என்னவென்று தெரியாமல் உளறுவதாகவே இதைப்பார்க்கிறேன் அல்லது ஏழு ஆண்டுகளாக இந்தியா முழுக்க பாஜக-வின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி தெரியாமல் பேசுகிறார்களோ!
உண்மையில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் தெரியுமா?
ஒன்றிய பாஜக ஆட்சியில் பத்திரிகையாளர்களின் கருத்துரிமை எப்படி இருக்கிறது என்பதன் மூலும் அதை புரிந்து கொள்ளலாம்.
இதைப்பற்றி என்னைப்போலவே சுதந்திர பத்திரிகையாளராக இயங்கும் கீதா சேஸு தன்னுடைய ‘Behind Bars: Arrest and Detention of Journalists in India 2010-20’ என்கிற கட்டுரையில் தொகுத்து இருக்கிறார். அவருக்கு நன்றி.
இதுதான் கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல். இதுதான் ஆபத்தான போக்கு. இதற்கு எதிராகத்தான் நம் குரல் ஒலிக்க வேண்டுமே தவிர… தனிநபர் தாக்குதல்களை மேடை போட்டு செய்கிறவன்களுக்கும், கொலை மிரட்டல் விடுகிறவன்களுக்கும், பொய்ப் பரப்பி மதவெறியை தூண்டிவிட்டு மக்களிடையே கலவரத்தை தூண்டுகிறவன்களுக்கும் அல்ல

Related posts

தாய் மறைத்து வைத்த தங்கத்தை களவாடிய மகன் கைது…!

Fourudeen Ibransa
2 years ago

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள் அது எப்படி!

Fourudeen Ibransa
2 years ago

தமிழகத்தில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும்…!

Fourudeen Ibransa
1 year ago