புளோரிடா : அமெரிக்காவில், 2 வயது குழந்தை தவறுதலாக சுட்டதில் தாய் உயிரிழந்தார். துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காத குற்றத்துக்காக அக் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஓர்லண்டோவைச் சேர்ந்த வியோன்டே ஆவ்ரே, 22 மற்றும் ஷாமயா லின், 21 தம்பதிக்கு, 2 வயது ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் லின். ஆவ்ரே அலுவலகம் சென்றிருந்தார். அப்போது, அங்கு ஒரு பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து குழந்தை விளையாடியது. தவறுதலாக அந்தக் குழந்தை துப்பாக்கி விசையை அழுத்தியதில், லின் படுகாயம் அடைந்தார்.

‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் லின் உடன் பணியாற்றியவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே வீட்டுக்கு வந்த ஆவ்ரேயும் போலீசுக்கு தகவல் கொடுத்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் லின் உயிரிழந்தார்.

துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காத குற்றத்துக்காக, ஆவ்ரேயை போலீசார் கைது செய்துள்ளனர்.இவ்வாறு பெற்றோரின் துப்பாக்கியை விளையாட்டு பொருளாக கருதி குழந்தைகள் விளையாடும்போது, அது தவறுதலாக வெடித்து உயிரிழக்கும் சம்பவம் அமெரிக்காவில் அடிக்கடி நடக்கிறது.

புளோரிடா : அமெரிக்காவில், 2 வயது குழந்தை தவறுதலாக சுட்டதில் தாய் உயிரிழந்தார். துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காத குற்றத்துக்காக அக் குழந்தையின் தந்தை கைது