தளம்
பிரதான செய்திகள்

எப்படி இருந்த நாடு இப்படி ஆகிவிட்டதே!

இந்த அரசாங்கம் நாட்டிற்கு எற்படுத்தியுள்ள நிலையை அவதானிக்கின்ற போது “ நன்றாக இருந்த நாடும் வீழ்ச்சியடைந்துள்ள இடமும்” என்று சொல்ல தோன்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார். 

இந்த அரசாங்கம் முழு நாட்டையும் பாதாளத்தில் தள்ளியுள்ளதோடு ஒரு இராத்தல் பானை வாங்குவதற்கு கூட தள்ளுவண்டியொன்று நிறைய பணம் கொண்டு செல்ல வேண்டிய நிலையொன்று சீக்கிரமாக உருவாகும் எனவும் நாளுக்கு நாள் பொருளாதார ரீதியில் நாடு வங்கரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டுகின்றார். 

எதிர்காலத்தில் பணம் அச்சிடும் அச்சகமொன்றை அரசாங்கம் நிறுவினாலும் அது குறித்து புதுமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுக்காட்டுகின்ற அதேவேளை அந்த அளவுக்கு அரசாங்கம் கையாளாகாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

திஸ்ஸமஹாராம ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (17) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம் பெற்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தென்னக்கோன் நிலமே மற்றும் திஸ்ஸமஹாராம ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் லால் சந்திர உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாயிகள் அவர்களின் விளைநிலங்களை கைவிட்டு விட்டு செல்கின்ற நிலைக்கும் அவ்வாறு கைவிடப்பட்ட அந்த விளைநிலங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கமே வழங்குகின்றது. அத்தோடு உள்நாட்டு உற்பத்திளார்களுக்கு மீண்டும் தலைதூக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டுகின்றார். விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் வேறு யாரும் அவ்வாறான எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தி என்பது செயற்பாட்டு ரீதியாகவும் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் இயக்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்கின்றார். 

நாடு கடனையும்,கடன் தவணையையும் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதோடு அதற்கு தேவையான வெளிநாட்டு இருப்புக்கள் நாட்டினுள் இல்லை என்று சுட்டுக்காட்டுகின்ற எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறான துரதிஷ்ட வசமான நிலைமை இதற்கு முன் அண்மைக்காலத்தில் ஒரு போதும் ஏற்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். 

பாதுகாத்து போசிப்பதற்கு தன்னைச் சுற்றி குடும்ப உறுப்பினர்கள் இல்லை என்பதோடு தனது குடும்ப உறுப்பினர்கள் இந்த நாட்டின் மக்கள் எனவும் தனது குழந்தைச் செல்வம் நாட்டில் உள்ள மொத்த குழந்தைகள் எனவும் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு கீரிடம் அணிவிப்பது தனது கனவாக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகின்றார்.

Related posts

அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கமாட்டேன்.! ஜனாதிபதி

Fourudeen Ibransa
2 years ago

மஹிந்த தலைமையில் நேற்று நடந்த ஆளுங்கட்சி சந்திப்பில் மோதல்!

Fourudeen Ibransa
3 years ago

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து; இன்று பிற்பகல் சம்பவம்….!

Fourudeen Ibransa
2 years ago