தளம்
பிரதான செய்திகள்

மைத்திரி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி!

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகள் உட்பட 30 அமைப்புகள் பொது கூட்டணியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இயங்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இதனடிப்படையில், அந்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் இடையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

பொதுக் கூட்டணியை உருவாக்கும் அடிப்படையான பேச்சுவார்த்தை இங்கு நடைபெறவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வலுப்படுத்தி விரிவான கூட்டணியை உருவாக்குவது இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வலுப்படுத்த அனைத்து தரப்பினரையும் இணைத்து செயற்பட அந்த முன்னணி எதிர்பார்த்துள்ளது. 

Related posts

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள்…!

Fourudeen Ibransa
1 year ago

சுதந்திரத்தை ஆணவத்துடன் நசுக்குகிறது அரசாங்கம்….!

Fourudeen Ibransa
1 year ago

மீண்டும் பலத்தை காட்டினார் ரணில்!

Fourudeen Ibransa
1 year ago