தமிழ் பேசுக் கட்சிகளின் கூட்டம், இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, டெலோ போன்ற பல கட்சிகள் இணைந்து இதனை நடத்தியுள்ளது. சம்பந்தர், விக்கி ஐயா மற்றும் சுரேஷ் ஆகியோர் என்று பல அரசியல்வாதிகள் இதில் கலந்து கொண்டுள்ள நிலையில். சுமந்திரன் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என அதிர்வு இணையம் அறிகிறது.

பல தன்னிச்சையான முடிவுகளை எடுத்துக் கொண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டத்திற்கு எதனையும் தெரிவிக்காமல், அவர் வெளிநாடு சென்று வந்த விடையம். தலைமையை பெரும் அதிருப்த்திக்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணத்தால் சம்பந்தர் இம் முறை சுமந்திரனை அழைக்கவில்லையாம். இதனூடாக நடந்த உயர் மட்டக் கூட்டத்தில்…

சுமந்திரன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார் என்ற உண்மை வெளியாகியுள்ளது. சுமந்திரன்,  வல்லவர், ஒரு நல்லவர் , என்று அடிக்கடி ஊருக்குள்ளே பேசி வந்த ஒரு சில தமிழர்கள் தற்போது தலையில் துண்டை போட்டு, முக்காடோடு அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

அர்த்தமுள்ள அதிகார பகிர்வு ஒன்றை இந்தியாவிடம் கோருவது என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 13க்கு அப்பால் சென்று, சமஷ்டி ஒன்றை கோரவுள்ளதாக இன்று நடந்த கூட்டதில் மேலும் முடிவாகியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

சுமந்திரனை ஒதுக்கி விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய இந்த கூட்டம் தொடர்பாக, சுமோ ஆதரவாளர்கள் குழப்ப நிலையில் உள்ளார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.