தளம்
பிரதான செய்திகள்

இந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவை அண்மித்த கடலில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

நிலநடுக்கத்தை அடுத்து, இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது.

எனினும் இதனால் இலங்கைக்கு எந்தவித சுனாமி பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

Related posts

இலங்கையில் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் 5.7 மில்லியன் மக்கள்…!

Fourudeen Ibransa
1 year ago

அமெரிக்க நாடாளுமன்றத்தில் திடீர் தாக்குதல்.!

Fourudeen Ibransa
3 years ago

ரணிலுடன் இணையும் சஜித்தின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!

Fourudeen Ibransa
2 years ago