தளம்
பிரதான செய்திகள்

அரசை விட்டு எவரும் வெளியேறலாம்.!

அரசை விட்டு எவரும் வெளியேறலாம். அதேபோல் வெளியில் இருந்து எவரும் அரசுடன் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோவிட் வைரஸ் தொற்றால் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை உடனே நிமிர்த்த முடியாது. கடந்த அரசும் எமது அரசிடம் ஆட்சியைக் கையளிக்கும்போது நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியில் இருந்ததை எவரும் மறந்திடலாகாது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்தும் நடவடிக்கையில் நிதி அமைச்சு ஈடுபட்டுள்ளது. அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்கள் உத்தமர்கள் அல்லர். அதேவேளை, அரசை விமர்சிக்கும் எதிரணியினரின் வாய்ச்சவடால்கள் குறித்து பொதுமக்கள் நன்கறிவார்கள் என குறிப்பிட்டார்.

Related posts

வரவுசெலவுத்திட்டம் நவம்பரில் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு !

Fourudeen Ibransa
1 year ago

“சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பின்றி இலங்கை போன்ற நாடுகளால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது. .!

Fourudeen Ibransa
2 years ago

மாணவனுக்கு தீயிட்டவர் கைது…!

Fourudeen Ibransa
1 year ago