தளம்
உலகம்

போராட்டக்காரர்களை எந்தவித அறிவிப்புமின்றி சுட்டுத் தள்ளும்படி உத்தரவு.!

கஜகஸ்தான் நாட்டின் பிரதமரான அஸ்கர் மாமின் நடப்பாண்டின் ஆரம்பத்தில் எரிபொருட்களின் விலையை 2 மடங்காக உயர்த்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் பொது மக்கள் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்தப் போராட்டம் அல்மாட்டி மற்றும் மேற்கு மங்கிஸ்டாவ் பகுதிகளில் வன்முறையாக வெடித்துள்ளது. இதன்விளைவாக கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் கஜகஸ்தானின் அதிபரான காசிம் அங்கு நடைபெறும் அசாதாரண சூழ்நிலையை மையப்படுத்தி “இந்த வன்முறை ஆட்சியை கவிழ்க்க நடத்தப்படும் ஒரு சதித்திட்டம்” என்று குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதற்கிடையே கஜகஸ்தான் நாட்டின் அதிபர் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களை எந்தவித அறிவிப்புமின்றி சுட்டுத் தள்ளும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வன்முறைக்கு பின்னால் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் ஒரு பெரிய சதித் திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தலிபான்கள் விடயத்தில் ரஷ்யா சந்தேகம்!

Fourudeen Ibransa
3 years ago

உலகத்திலேயே அதி பாதுகாப்பு பொறி முறையை பயன்படுத்திய ரஷ்யா

Fourudeen Ibransa
2 years ago

 கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் ஜனாதிபதி தப்பியது எப்படி?

Fourudeen Ibransa
2 years ago