நுவரெலிய மாவட்ட செயலக அஅதிகரிப்பினை காலி மாவட்டத்துக்கும் நுவரெலிய மாவட்டத்திற்கும் மாறுபட்ட விதத்தில் பாரபட்சமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிராகவும் நுவரெலிய மாவட்டத்தில் முழுமையான பிரதேச செயலகங்களை நடைமுறைப்படுத்தவும் கோரி மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்த ஒருமாத கையெழுத்து இயக்கத்தினை நிறைவாக நுவரெலிய மாவட்டம் முழுவதும் பயணித்து மகலகளிடம் சேகரிக்கும் பணியை ‘நுவரெலியவில் இருந்து நுவரெலியாவுக்கு’ எனும் பயணமாக நடாத்தவுள்ளதாக மலையக அரசியல் அரங்கம் அறிவித்துள்ளது.

மலையக அரசியல் அரங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் நடாத்திய ஊடகச் சந்திப்பிலேயே மேற்படி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 25 ஆம் திகதி நுவரெலிய நாகரில் ஆரம்பிக்கும் கையெழுத்துப் பெற்ற கோவைகளைச் சேகரிப்பு பயணம் வலப்பனை, ஹங்குராங்கத்தை, கொத்மலை, அம்பகமுவை ஆகிய பிரதேச செயலக எல்லைகளின் ஊடாகப் பயணித்து இறுதியாக 27 ம் திகதி நுவரெலிய பிரதேச செயலக எல்லையை அடைந்து அன்று மாலை மாவட்டச்

செயலாளரிடம் பொது மக்கள் மனு கையளிக்கப்படும் என அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள நகரங்களில் தமது குழுவினரிடம் கையெழுத்து மனுவை பொதுமக்கள் கையளிக்கத்தக்கதாக தமது களச் செயற்பாட்டாளர்கள் ஊடாக ஒழுங்குகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் 25 ம் திகதி வலப்பனை, ஹங்குரங்கத்த, கொத்மலை பிரதேச நகரங்களிலும் 26 ஆம் திகதி அம்பகமுவை பிரதேச செயலக நகரங்களிலும் 27 ஆம் திகதி நுவரெலிய பிரதேச செயலக பகுதி நகரங்களிலும் கையெழுத்துகள் பெற்ற கோவைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய ஜனநாயக வழியில் எமது கோரிக்கையை மாவட்டச் செயலாளர் ஊடாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், பிரதமர் , ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கும் அதேவேளை உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாதவிடத்து,

மலையக அரசியல் அரங்கம் சார்பாக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கினை தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஊட்டச்சந்திப்பில் பிரதான அமைப்பாளர் செந்தூரன் , செயலாளர் கிருஷ்ணகுமார், உயர்பீட உறுப்பினர் வினோத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.