யுக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொண்டால், ரஷ்ய ஜனாதிபதி மீது தனிப்பட்ட பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனவே குறித்த திட்டத்தினை ரஷ்யா உடனடியாக கைவிட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், யுக்ரைன் மீது தாம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில், அமெரிக்காவும் ஏனைய சில நாடுகளும் பதற்றத்தை அதிகரித்து வருவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
மொஸ்கோ எல்லையில் ஒரு இலட்சம் ரஷ்ய துருப்பினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் யுக்ரைன் மீது ரஷ்யா எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.