தளம்
உலகம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கொள்கை ரீதியான சந்திப்பு.1

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கொள்கை ரீதியான சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஃப்ரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனின் ஏற்பாட்டில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

பேச்சுவார்த்தை எப்போது இடம்பெறும் போன்ற விபரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

ரஷ்யா விரைவில் உக்ரைன் மீது படையெடுக்கவிருப்பதாக அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.

இந்த நிலைமையை தவிர்ப்பதற்கான நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த பேச்சுவார்த்தை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்புத் திட்டத்தை கைவிட்டால் மாத்திரமே அமெரிக்க ஜனாதிபதி இந்த பேச்சுவார்த்தைக்கு வருவார் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எவ்வாறாயினும், உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா.!

Fourudeen Ibransa
2 years ago

8 ஆம் திகதி சந்திர கிரகணம்..!

Fourudeen Ibransa
2 years ago

அமெரிக்க ஜனாதிபதியின் ஞாபக சக்திகள் குறைந்து விட்டது..!

Fourudeen Ibransa
2 years ago