இந்தியாவுடனான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுமதிக்காக இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகளை இருபதுக்கு20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி லக்னோவில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, வனிந்து ஹசரங்க மற்றும் பினுர பெர்னாண்டோர் ஆகிய வீரர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது குணமடைந்துள்ள அவர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவர் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினுள் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது, உபாதைக்கு உள்ளான அவிஸ்க பெர்னாண்டோ, நுவன் துஷார மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.