இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

01. இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் – காலித் நசார் சுலைமான் அல் அமெரி (Khaled Nasser Sulaiman Al Ameri)

02. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியோன் சுங் (Julie Jiyoon Chung)

03. இலங்கைக்கான லிபியாவின் தூதுவர் நாசர் அல்ஃபுர்ஜானி (Nasser Alfurjani)

பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் பிரதான கூட்டமைப்பு அதிகாரி செனரத் திஸாநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.