சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் பத்து மகாவலி வலயங்களுக்கு உரிய பிரதேசங்களில் உள்ள காணிகளுக்காக ஒரு லட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகும்.

எம்பிலிப்பிற்றிய மகாவலி மைதானத்தில் இதனை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இதில் பங்கேற்பார்.

முதற்கட்டமாக வளவ்வ வலயத்தில் காணி உரித்து இல்லாதவர்களுக்கு பத்தாயிரம் காணி உறுதிகளை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வருடத்திற்குள் ஒரு லட்சம் காணி உறுதிகளையும் வழங்குவது அரசாங்கத்தின் இலக்காகும் என இலங்கை மகாவலி அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் ஒழுங்குறுத்தல் பணிப்பாளர் லங்கா பண்டார சேனாரத்ன தெரிவித்தார்.