விராட் கோலியின் செயலால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கவுள்ளது. இந்த டி20 தொடரில் இந்திய அணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் முக்கிய வீரர்கள் அனைவருமே இந்த தொடரில் இருந்து திடீரென வெளியேறிவிட்டனர்.

துணைக்கேப்டன் கே.எல்.ராகுல், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சாளர் தீபக் சஹார் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறிவிட்டனர். ஆனால் சீனியர் வீரர் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஓய்வு வேண்டும் எனக்கூறி அணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓய்வில் சென்ற கோலி மீண்டும் பபுளுக்குள் இணைய விருப்பப்படவில்லை.

இதனால் இந்த இக்கட்டான சூழலில் இளம் வீரர்களை வைத்து தான் ரோகித் சர்மா சமாளிக்க வேண்டியுள்ளது. சீனியர் வீரராக இருப்பவர், அணியின் வெற்றி முக்கியம் என நினைத்து மீண்டும் வந்திருக்க வேண்டும். ஆனால் எந்தவித கவலையும் இன்றி ஓய்வெடுக்க சென்றிருப்பது தவறு என ரோகித் சர்மா ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகமே இந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அணி பலவீனமாக இருக்கும் போது கோலி இப்படி செய்யலாமா என ரோகித் சர்மா ஆதங்கத்தில் இருப்பதாக தெரிகிறது.