ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கும், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று ஜெனிவாவில் இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் பொறுப்புக்கூறலில் ஏற்பட்டுள்ள திசைமாறிய பொறிமுறை உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது பேராயர், மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு உள்நாட்டில் நீதி கிடைக்காததால் சர்வதேசத்தை நாடப்போவதாக பேராயர் அறிவித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் பரிசுத்த பாப்பரசரையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.