அமெரிக்கர்களுக்கு உரையாற்றும் வேளை, உக்கிரைன் பிரச்சனை தொடர்பாக, பேசிய ஜனாதிபதி பைடன். இறுதிவரை உங்களை ஈரக் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று கூற, ஈராக்கா ? என்று மக்கள் குளம்ப… பின்னால் இருந்த கமலா ஹரிஸ், உக்கிரைன் மக்கள் என்று சொல்லுங்கள் என்று எடுத்துக் கொடுக்கும் அளவு அமெரிக்க ஜனாதிபதியின் ஞாபக சக்திகள் குறைந்து விட்டது. அவரது பேச்சில் தடுமாற்றம் இருக்கிறது. இது பெரும் சர்சையாக பல மாதங்களாக பேசப்பட்டு வரும் ஒரு விடையம். அமெரிக்க வரலாற்றில், இந்த அளவு வயது முதிர்ந்த நபர் ஒருவர், ஜனாதிபதி ஆகுவது இதுவே முதல் தடவை என்கிறார்கள். 79 வயதைக் கடந்துள்ள ஜோ பைடனுக்கு…. பெரும்..

ஞாபக மறதி நோய் இருக்கிறது என்பது உண்மை. சில வேளைகளில் அவரது இல்லமான வெள்ளை மாளிகைக்கு உள்ளே செல்லும் போது கூட, அவர் வழி தெரியாமல் தடு மாறி வேறு வழியால் செல்வதும் உண்டு. பின்னர் காவலாளிகள் அவரை கையைப் பிடித்து கூட்டிச் செல்வது வழக்கம். இப்படியான ஒரு நிலையில், பைடன் தொடர்ந்தும் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க வேண்டுமா ? என்ற கேள்விகள் எந்துள்ளது.