தளம்
பிரதான செய்திகள்

ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவு.!

உக்ரைனுக்கு எதிரான படைப் பலப் பியோகத்தை உடனடியாக நிறுத்திப் படைகளை அங்கிருந்து முற்றாக அகற்று மாறு ரஷ்யாவைக் கோருகின்ற பிரே ரணை ஐ. நா. பொதுச் சபையில் மிகப் பெரும் ஆதரவுடன் நிறைவேறியிருக்கிறது.

பொதுச் சபையின் இன்றைய தீர்மானம் போர் மேலும் தீவிரமாகுவதற்கே வழி வகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபைக் கான ரஷ்யத் தூதர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்

உக்ரைனில் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவந்து தனது படைகளை அங்கி ருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரும் பிரேரணை முதலில் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்டபோது மொஸ்கோ தனது வீற்றோ அதிகாரத்தி னால் அதனை நிறைவேற்றவிடாது தடுத் துவிட்டது. அந்த வாக்கெடுப்பிலும் சீனா வும் இந்தியாவும் கலந்துகொள்ளாது விலகியிருந்தன என்பது தெரிந்ததே.

பாதுகாப்புச் சபையில் பிரேரணை தோற் கடிக்கப்பட்டதை அடுத்தே பொதுச் சபை யின் அவசரகாலக் கூட்டத்தைக் கூட்டி அதிலே உறுப்பு நாடுகளது ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Related posts

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்…! 

Fourudeen Ibransa
1 year ago

இன்றைய கொரோனா காலத்தில் உலவுகின்ற ஆதாரமற்ற வீண்வதந்திகளை நாம் நிராகரிக்க வேண்டும்!

Fourudeen Ibransa
3 years ago

நுவரெலியாவில் நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ…!

Fourudeen Ibransa
2 years ago