பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சில காரணங்களால் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மூன்று மாதங்களுக்கு ஜப்பானுக்கு சென்றுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாவும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
ரொஷான் ரணசிங்கவிற்கு மூன்று மாத விடுமுறையில் செல்ல நாடாளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. அமைச்சின் செயற்பாடுகளால் விரக்தியடைந்துள்ள நிமல் லன்சா, சில காலங்களாகவே மன அமைதியை எதிர்பார்த்து வெளிநாடு சென்று வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, அமைச்சுப் பதவி கிடைக்காததால் விரக்தியடைந்துள்ள அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசியல் நடவடிக்கைகளை விட்டு விலகி வெளிநாடு செல்லவுள்ளதாக ஏற்கனவே தமது நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவும் அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகியதோடு அண்மையில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பதவியேற்க சென்றுள்ளார்.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்