” லீகுவான் இறந்துவிட்டார். மகாதீர் மொஹமட் வீட்டுக்கு சென்றுவிட்டார். ” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

” கோட்டாபய ராஜபக்ச என்பவர் லீகுவான் போன்றவர். மஹிந்த ராஜபக்ச என்பவர் மகாதீர் மொஹமட் போன்றவர். எனவே, இலங்கைக்கு லீகுவான் மற்றும் மகாதீர் ஆகிய இருவரும் கிடைத்துள்ளனர். இவர்கள் நாட்டை மீட்பார்கள்.” – என்று ஆளுங்கட்சியில் இருந்தபோது விமல் வீரவன்ச உரையாற்றியிருந்தார்.

தற்போது அவர் அந்த அரசில் இருந்தே வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லீகுவான், மகாதீர் மொஹமட் எல்லாம் எங்கே என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே விமல், மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.