முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை ஒன்றினைத்துக் கொண்டு நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டணிக்குள் முரண்பாட்டை தோற்றுவித்து அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிப்பதாகவும் சுதந்திர கட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதால் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதெனவும் தெரிவித்தார்.

ஒருசில தவறான புரிதல்களினால் அவர்கள் அமைச்சரவை கூட்டுப்பொறுப்புக்கு முரணாக செயற்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதியால் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் விமல், உதய ஆகியோரை இணைத்துக்கொண்டு செயற்படவே எதிர்பார்க்கிறோம் என்றார்.