தளம்
உலகம்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, மூன்று முறை பிரதமர் பதவி வகித்திருந்த நவாஸ் ஷெரீப்பின் 70 வயது இளைய சகோதரரும், எதிர்க்கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் புதிய பிரதமர் இன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அந்நாட்டு நாடாளுமன்றில் புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பில் 174 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஷெபாஷ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த பிலாவல் பூட்டோ வெளியுறவு அமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

கிழக்கு உக்ரைன், பகுதியில் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்.!

Fourudeen Ibransa
2 years ago

உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியா பேரழிவை சந்திக்கும்..1

Fourudeen Ibransa
2 years ago

அமெரிக்கர்களை அழைத்துச்செல்ல 3000 துருப்பினர் காபூலுக்கு விஜயம்!

Fourudeen Ibransa
3 years ago