பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாமல் இலங்கை கடனுக்கு மேல் கடன் வாங்கி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது..!-

இந்திய முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவிப்பு.

இலங்கை கடனுக்கு மேல் கடன் வாங்கி வங்குரோத்து நிலையை அடைந்து வருகிறது என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இலங்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கும் பொருளாதார நெருக்கடிக்கு தவறான கொள்கைகளே காரணம்.இலங்கை பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாமல் அவர்கள் எடுத்த தவறான முடிவுகள்தான் இதற்கு காரணம்.

அந்த தவறான பொருளாதார கொள்கையின் அடையாளங்கள் இந்தியாவிலும் தெரிகிறது. மத்திய பாஜக அரசின் கொள்கைகளிலும் அதற்கான சாயல்கள் தெரிகின்றன.இலங்கையில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களால் வேகமாக உயர்ந்த விளைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவர்கள் பொருளாதார சரிவை சரி செய்ய கடன் வாங்கி, மேலும் சரிவை சந்தித்து மேலும் கடன் வாங்கி உள்ளனர்.அங்கு சில்லறை பணவீக்கம் இன்று 7 சதவீதத்திற்கு மேல் உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது.

இந்தியாவிலும் எக்கச்சக்க கடன் வாங்கி எதற்கு செலவு செய்கிறார்கள் என்றே தெரியாமல் செலவு செய்கிறார்கள்.இந்தியாவும் தவறான கொள்கைகளை பின்பற்றினால் இலங்கையில் ஏற்பட்ட நிலைதான் இங்கும் ஏற்படும் என்றும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.