” சவாலை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமைச்சு பதவியை ஏற்றேன். எனவே, மக்கள் பிரச்சினைக்கு தீர்வு இல்லையேல் அமைச்சு பதவியை துறக்க பின்நிற்க போவதும் இல்லை.”

இவ்வாறு புதிய கைத்தொழில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு

” அமைச்சு பதவிக்காக நான் விலைபோகவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள சவாலை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவேதான் சவாலை எதிர்கொள்ளும் நோக்கில் அமைச்சு பதவியை ஏற்றேன்.

தற்போதைய பிரச்சினைக்கு நாடாளுமன்றம் தீர்வை முன்வைக்கவில்லை. சபையில் இடம்பெற்ற விவாதங்கள்கூட அரசியல் நோக்கம் கொண்டவை. இது தொடர்பில் சபாநாயகருக்கு நான் தெளிவுபடுத்தியிருந்தேன்.

ராஜபக்சக்களை பதவி விலக சொல்கின்றனர். அரசமைப்பில் அப்படி உள்ளதா? பதவி விலகல் என்பது சவாலை எதிர்கொள்ள முடியாமல் தப்பிச்செல்லலாகவே கருதப்படும். தேர்தல்மூலம் அவர்களின் இருப்பை மக்கள் தீர்மானிக்கட்டும். தனது முடிவில் தவறு உள்ளது என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளமை வரவேற்ககூடிய விடயமாகும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். பிரச்சினைக்கு தீர்வை தேட நானும் ஒத்துழைப்பு வழங்குவேன். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தால் அமைச்சு பதவியை துறக்ககூட பின்நிற்கமாட்டேன்.” – என்றார்.