19ஆவது திருத்ததச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தம் நோக்கம் இருந்தால் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையில் தன்னிச்சையாக இயங்கும் அணியால் சமர்ப்பிக்கப்பட்ட 21ஆவது திருத்தத்துக்கான முன்மொழிவை மையப்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்”, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் பங்கேற்றிருந்த எம். ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்தபோது, 19ஆவது திருத்தச்சட்டத்தினை மீண்டும் அமுல்படுத்தும்முகமாக 21ஆவது திருத்தச் சட்டத்துக்கான யோசனையை திங்கட்கிழமையன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

குறுகிய காலத்தில் இந்தவிடயத்தை முன்நகர்த்துவதாக இருந்தால் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலான தன்னிச்சையாக இயங்கும் அணியினர் சமர்ப்பித்துள்ள யோசனையை பின்பற்ற முடியும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஆளும் தரப்பினர், தற்போதுவரையில் அது தமது கைகளுக்கு கிடைக்கவில்லை. அதுகிடைத்த பின்னரே தீர்மானத்தைக் கூற முடியும் என்று கூறியுள்ளனர்.

இதேநேரம், வாஷிங்டனில் இருந்து நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாடு திருப்பியதும் குறித்த 21ஆவது திருத்த முன்மொழிவு தொடர்பில் தீர்மானங்களை எடுக்க முடியும் என்று தீர்மானிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.