காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக நடக்கும் போராட்ட களத்தில் சர்வதேச பத்திரிகையாளர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர்.

காலிமுகத்திடலில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் கூடி கோட்டா கோ கம என்ற போராட்ட கிராமத்தை உருவாக்கி இரு வாரங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து சர்வதேசம் முழுவதும் தகவல்களை வழங்கும் பொருட்டு பல்வேறு நாடுகளின் செய்தியாளர்கள் இலங்கை வந்துள்ளனர். சுமார் நூறுக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் காலிமுகத்திடலுக்கு சென்றுள்ளனர். இதனால், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை எதிர்வரும் நாட்களில் இளைஞர்களின் போராட்டம் முக்கிய செய்திகளாக இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.