ராஜபக்சர்கள் செய்த ஊழல்கள் காரணமாக சிறைக்கு சென்றுவிடுவோம் என்ற பயத்தின் காரணமாகவே அரசாங்கத்திலிருந்து விலகி வெளியில் செல்லாமல் இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்தனகல்ல – ஊராபொல பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்போது நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது.இருப்பினும் ராஜபக்சர்கள் ஒன்றும் கேளாதவாறு ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.

இதுவரை செய்த ஊழர்கள் காரணமாக சிறைக்கு செல்ல வேண்டியேற்படும் என்ற பயத்தின் காரணமாவே பதவி விலகாமல் உள்ளனர்.இவர்களுக்கு எவ்வளவு சொத்து,பணம் இருந்தாலும் போதாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிர் அளிக்க தற்போதைய தலைவர் மற்றும் செயலாளர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ளவர்.

அதை யாராலும் அழிக்க முடியாது.நான் கட்சியை விட்டு விலகவில்லை. என்னை துரத்தினார்கள்.மக்கள் இன்னும் என்னை அழைக்கின்றனர். தற்போது கட்சியில் உள்ளவர்களோடு கைகுலுக்குவதில் அர்த்தமில்லை.

திருடர்கள் எல்லாம் போன பிறகு நாங்கள் அழகான ஆட்சியை அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.