தமது கட்சியால் விடுக்கப்பட்டுள்ள நிபந்தனையை ஜனாதிபதி ஏற்காதபட்சத்தில், அவர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசிலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்படும் முடிவை கடந்த 05 ஆம் திகதி சுதந்திரக்கட்சி எடுத்தது

எனினும், அக்கட்சியின் சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் அரசுக்கு ஆதரவு வழங்கி, இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர்.

இவ்விருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறும், அவ்வாறு இல்லாவிட்டால் நாளை(29) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசு அமைப்பது சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்காக அரச மற்றும் சுயாதீன அணிகளுக்கு ஜனாதிபதி நாளை அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.