பொருளாதார நெருக்கடியினை தீவிரப்படுத்தும் அனைத்து காரணிகளும் ஒரு மையப்புள்ளியை அண்மித்துள்ளன. நாட்டில் பொருளாதார நெருக்கடி சிக்கலடைந்துள்ள ஒரு நூல் பந்துப்போல் காணப்படுகிறதால் அதனை பொறுமையாக அவிழ்க்கவும் முடியாது,விரைவாக வெட்டி விடவும் முடியாது.

எதிர்வரும் மாதம் பாரிய பொருளாதார நெருக்கடியை  எதிர்க்கொள்ள நேரிடும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலைமை தொடர்பில் சமூக வலைத்தளங்களுக்கு காணொளி ஒன்றினை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு டொலர் பற்றாக்குறை,அரச வருமானம் வீழ்ச்சி, அரச செலவு உயர்வு,தாங்கிக்கொள்ள முடியாத கடன்சுமை ஆகியவை பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணிகளாக அமைகின்றன.அரச கூட்டுத்தாபனங்கள் நட்டமடைதல் கடன்சுமையை மேலும் துரிதப்படுத்துகின்றன.

இலங்கை மின்சார சபை கடந்த 2021ஆம் ஆண்டு 79 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் 79 பில்லியன் நட்டத்தை காட்டிலும் அதிகரித்த நட்டத்தை எதிர்க்கொண்டிருக்க வேண்டும் என சிலர் குறிப்பிடுகிறார்கள்.

இவ்வருட இறுதியில் இலங்கை மின்சார சபை 100பில்லியன் நட்டத்தை எதிர்க்கொள்ள நேரிடும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மின் அலகு உற்பத்திக்காக 53 ரூபாய் செலவாகும் அதேவேளை ஒரு மின்அலகிற்காக மின்பாவனையாளர்களிடமிருந்து 16 ரூபாய் அறவிடப்படுகிறது.

மறுபுறம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2021ஆம் ஆண்ட 83 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளது.

எரிபொருள் விலை அதிரிக்காத காரணத்தினால் 1பில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ள அதே வேளை விலை அதிகரிப்பை தொடர்ந்தும் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 327 மில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி,மக்கள் வங்கி ஆகிய இரு பிரதான வங்கிகள் மின்சாரசபைக்கும்,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் தொடர்ந்து கடன் வழங்கி வருகிறது.மறுபுறம் ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனத்திற்கும் கடன் வழங்குறது.

இந்நிலைமை தொடர்ந்து நீடித்தால் இவ்விரு வங்கி கட்டமைப்பிற்கும் பாதிப்பு ஏற்படும்.தேசிய சேமிப்பு வங்கி,இலங்கை வங்கி,மக்கள் வங்கி ஆகிய வங்கிகள் அரசாங்கத்திற்கு ரில்லியன் கணக்கு கடன் வழங்கியுள்ளன.

மின்சார சபையின் நட்டத்தை குறைக்க வேண்டுமாயின் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நட்டத்தை குறைக்க வேண்டுமாயின் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும்.எரிபொருள் உட்பட மின்கட்டணத்தின் விலை அதிகரிக்கப்படுமாயின் அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அனைத்து பிரச்சினைகளும் தற்போது ஒரு மையப்புள்ளியை அண்மித்து பாரிய  நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.பொருளாதார நெருக்கடி நூல் பந்து போல் சிக்கலடைந்துள்ளளதால் அதனை பொறுமையுடன் அவிழ்ப்பதாலும் பிரச்சினை அல்லது வெட்டினாலும் பிரச்சினை.எதிர்வரும் மாதங்களில் பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.