கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்களை கண்டித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ருவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியைத் தணிக்க இந்த மோதல் உதவாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் பற்றுறுதிகளைப் பொருட்படுத்தாமல், வன்முறையில் ஈடுபடுபவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, மோதலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனைத்து குடிமக்களும் அமைதியை பேணுமாறும், நிதானத்தை கடைப்பிடித்து இந்த நெருக்கடியை தீர்ப்பதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.