குமார் வெல்கம – அவரது வாகனம் மீது தாக்குதல்!

முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம மற்றும் அவர் பயணித்த வாகனம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த அவர், வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் வீட்டின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, சன்ன ஜயசுமன, கோகிலா குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரின் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் அவரது மகன் அமைச்சர் கனக ஹேரத் ஆகியோரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

ஹொன்னந்தர பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீடும் சற்று முன்னர் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறையில் உள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் இல்லத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்ட போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினா் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொரட்டுவை வில்லோரவத்தையில் அமைந்துள்ள மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோவின் இல்லத்திற்கு சிலர் தீ வைத்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.