” எவரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். ஜனநாயக உரிமைகளுக்காக அறவழியில் போராடுவோம்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர்,

” அறவழியில் போராடியவர்கள்மீது ராஜபக்ச பயங்கரவாதம் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. இதனுடன் தொடர்புபட்ட வன்முறையாளர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அதனை நாம் செய்வோம்.

வன்முறைகள் வேண்டாம். எமது நாடு வன்முறைகளால்தான் பின்நோக்கிச் சென்றுள்ளது. சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம். நபர்களை தாக்க வேண்டாம். ராஜபக்ச பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்ககூடாது. அமைதியாக இருக்கவும். உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடுவோம்.” – என்றார்.

அதேவேளை, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட பிரதான கட்சிகளின் அரசியல் தலைவர்களும், ஆன்மீக தலைவர்களும், எவரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.